கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி ரூ.1000 பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் தொடங்கியது. அதன்படி பல பெண்கள் உங்கலுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் கலந்து கொண்டு 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நவம்பர் 14-ம் தேதி முடிவடைந்த நிலையில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்து வருகின்றனர். இவர்களில் தகுதியானவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 15 முதல் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்காத பலரும் தற்போது மகளை உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்த 28 லட்சம் பேரின் மனுக்களை மட்டுமே அரசு பரிசீலித்து வருகிறது. அவர்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி..!



