மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நட்ராஜ், மீண்டும் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வருடங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், அதன் பின் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார்.
நேற்று அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன், தி.மு.க.,வில் இணைந்த நிலையில், அவரைப்போலவே மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டிய நட்ராஜ் மீண்டும் அரசியலில் சுறுசுறுப்பாகி உள்ளார். நேற்று வெளியிட்ட அறிக்கையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற, அனைவரும் பழனிசாமி தலைமையில் செயல்பட வேண்டும். அ. தி.மு.க., வை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும். அதற்காக உறுதியேற்று களம் காண வேண்டும். எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையே அதிமுக தலைமைக்கு விசுவாசமாகவும், தலைமை எடுத்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க முழு முயற்சியும் எடுப்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு மன்னிப்பு கடிதம் அளித்துள்ளார். அவரின் மன்னிப்பு கடிதத்திற்கு இபிஎஸ் ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டு மயிலாப்பூரில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற நட்ராஜ், முன்னாள் சென்னை காவல் ஆணையராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.