பரபரப்பு!… பிரபல பாலிவுட் நடிகர் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு!

Salman Khan: பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு அருகில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பாந்த்ர பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை சல்மான் கான் வீட்டின் அருகே திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மும்பை கிரைம் பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதிகாலை 5 மணி அளவில் 2 மர்மநபர்கள் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதும் 3 ரவுண்டு துப்பாக்கியால் சுடப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே சல்மான்கான் மற்றும் அவரது தந்தைக்கு எதிராக மிரட்டல் உள்ள நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: அதிகரித்த வேலையின்மை!… வெற்றி யாருக்கு?… மோடி VS ராகுல் காந்தி!… 19 மாநில கருத்துக் கணிப்பு!

Kokila

Next Post

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் வாக்களிக்க முடியும்…! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்…!

Sun Apr 14 , 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் -19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றாலும் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தைக் கொண்டு நீங்கள் வாக்களிக்கலாம். வாக்களிப்பதன் அவசியம் என்ன? குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிப்பது மிகப்பெரிய கடமை ஆகும்.குடிமக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வாக்குரிமை மூலம் செலுத்துகின்றனர். இந்த உரிமையைப் பயன்படுத்தித் தங்கள் […]

You May Like