மகிழ்ச்சி..! மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து விலக்கு…!

Tn Govt 2025

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது.


மின்வாரியத்தில் தற்போது பணியில் உள்ள காது கேளாத, வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் மொழி தேர்வு சான்றிதழ் இல்லாமல் பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மின்பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் மாற்றுத்திறன் பணியாளர்களின் தகவல்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து முதன்மை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளார்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 % இடஒதுக்கீடு உள்ளதால், அனைத்து அரசு துறைகளிலும் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றி வருகின்றனர். இதில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளும் உள்ள நிலையில் அவர்களால் தமிழ் மொழிக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும், ஆனால் நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியாது, எனவே இவர்களுக்கு தமிழ் மொழிதிறன் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்வில் மொழி திறன் தேர்ச்சியில் இருந்து மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது.

Vignesh

Next Post

நள்ளிரவில் கோரம்.. லாரி பள்ளத்தில் கவிழ்ந்து 9 விவசாயிகள் பலி..!!

Mon Jul 14 , 2025
9 farmers killed as lorry falls into ditch..!!
Accident 4

You May Like