இந்தியாவில் Gen Z தலைமுறையினர் மத்தியில் போலி திருமணம் என்ற ட்ரெண்ட் மிகவும் பிரபலமாகி வருகிறது.
சமீப காலமாக, இந்தியாவில் சமூக ஊடகங்களில் போலி திருமணம் (Fake Wedding) என்ற ட்ரெண்ட் வைரலாகி வருகிறது.. ஆனால் போலி திருமணம் என்றால் என்ன, அது ஏன் Gen Z இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது?
போலி திருமணம் என்றால் என்ன?
ஒரு போலி திருமணம் என்பது நிஜ திருமணத்தை போலவே அனைத்து வேடிக்கைகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் கூடிய ஒரு திருமண கொண்டாட்டம் ஆகும். ஆனால் உண்மையான திருமணம் நடைபெறாது.. இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளாது.. நண்பர்கள் ஒன்று கூடி கொண்டாட, நடனமாட, உடை அணிந்து, உண்மையான திருமணத்தைப் போல விருந்து வைக்கும் ஒரு அரங்கேற்ற நிகழ்வு.
ஹல்தி மற்றும் மெஹந்தி விழாக்கள் முதல் சங்கீத் இரவுகள் என அனைத்தும் ஒரு பாரம்பரிய இந்திய திருமணத்தைப் போலவே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படுகின்றன. ஒரே வித்தியாசம்? உண்மையில் யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள்.
இது ஏன் பிரபலமாகி வருகிறது
பாரம்பரிய திருமணங்கள் உணர்ச்சி மற்றும் நிதி அழுத்தத்துடன் வருகின்றன. போலி திருமணங்கள் அதையெல்லாம் தவிர்த்துவிட்டு மகிழ்ச்சியை மட்டுமே வழங்கும் என்று இளம் தலைமுறையினர் நம்புகின்றனர்..
இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடக தளங்களில், போலி திருமணங்கள் சரியான உள்ளடக்கத்தை உருவாக்குகின்றன. இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்களை அள்ளலாம்..
இந்திய திருமணங்கள் அவற்றின் ஃபேஷனுக்கு பெயர் பெற்றவை. இந்த போலி திருமணங்கள் அனைவருக்கும் உண்மையான திருமணம் தேவையில்லாமல் தங்கள் கனவு லெஹங்கா அல்லது ஷெர்வானி அணிய வாய்ப்பளிக்கின்றன.
இந்த போலி திருமண நிகழ்வுகள் பொதுவாக நண்பர்களால் நண்பர்களுக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன. வழக்கமான குடும்ப நாடகம் இல்லாமல் ஒரு வேடிக்கையான, இளமை கொண்டாட்டமாக இது அமைகிறது.
போலி திருமணங்கள் எவ்வாறு ஏற்பாடு செய்யப்படுகின்றன?
போலி திருமணங்கள் அவர்கள் விரும்பும் அளவுக்கு எளிமையாகவோ அல்லது விரிவாகவோ இருக்கலாம். சிலர் அதை ஒரு திருப்பத்துடன் ஒரு ஆச்சரியமான பிறந்தநாள் விழாவாக திட்டமிடுகிறார்கள்.. இன்னும் சிலரோ திருமண இடங்களை வாடகைக்கு எடுத்து ஒப்பனை கலைஞர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை கூட வேலைக்கு அமர்த்துகிறார்கள். பெரும்பாலும் இந்த போலி திருமணங்களில் வேடிக்கை மற்றும் புகைப்படங்களுக்காக மணமக்கள் நடிக்கின்றனர்.
தற்போதைய சூழலில் இந்த போலி திருமணங்கள் ஒரு பாரம்பரிய விழா என்பதை விட ஒரு வேடிக்கையான Gen Z சமூக நிகழ்வாகும். ஆனால் சம்பிரதாயத்தை விட அனுபவத்தை இளைஞர்கள் அதிகமாக மதிப்பிடுவதால், இளம் தலைமுறை எவ்வளவு ஆக்கப்பூர்வமாகவும் கவலையற்றதாகவும் இருக்க முடியும் என்பதை இந்த ட்ரெண்டிங் காட்டுகிறது..
Read More : ரூ.50 நாணயம் வரப்போகிறதா? மத்திய அரசு சொன்ன முக்கிய அப்டேட்..