பிரபல இளம் நடிகர் புற்றுநோயால் மரணம்.. சோகத்தில் திரையுலகம்..

அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.. அவருக்கு வயது 30.

அசாமிய திரையுலகில் முக்கியமான நபராக கருதப்பட்டவர் கிஷோர் தாஸ்.. இவர் நடிகர், நடனக் கலைஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத்திறமை கொண்டவர்.. 1991-ம் ஆண்டு பிறந்த கிஷோர் 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ளார்.. கிஷோரின் Turrut Turut என்ற இசை வீடியோ அசாமின் மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. மேலும் பந்தன் மற்றும் பிதாதா என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலமும் கிஷோர் பிரபலமடைந்தார். இதுதவிர மேலும் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். இந்தியாவின் காட் டேலண்ட் மற்றும் டான்ஸ் இந்தியா டான்ஸிலும் கிஷோர் தாஸ் பங்கேற்றுள்ளார்.

மாடல் ஹன்ட்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்த கிஷோர் Mr. Photogenic என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் அவர் 2020-2021 இல் மிகவும் பிரபலமான நடிகருக்கான ஏசியாநெட் ஐகான் விருதையும், 2019-ம் ஆண்டில் Candid Young Achievement Award என்ற விருதையும் பெற்றார்.

இதனிடையே நடிகர் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.. இதற்காக கவஹாத்தியில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் மேம்பட்ட சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார். சென்னையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிஷோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.. இதனால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக காலமானதாகவும் கூறப்படுகிறது. அவரின் மறைவு செய்தி அசாமி திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. சக நடிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்பினரும் கிஷோருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Maha

Next Post

#Tax: "சூப்பர் நியூஸ்" இனி நீங்க சொத்துவரி கட்ட அலைய வேண்டாம்...! மொபைல் மூலம் ஆன்லைனில் நீங்களே செலுத்தலாம்...!

Sun Jul 3 , 2022
சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரியினை உரிமையாளர்கள் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் முந்தைய சென்னை மாநகராட்சி அல்லது இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு, இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளுக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள உயர்வு காரணிகளின் அடிப்படையில் சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், ஏற்கனவே சொத்துவரி […]

You May Like