விவசாயிகளே..!! ’இனி ஞாயிற்றுக் கிழமையும் இயங்கும்’..!! அமைச்சர் சக்கரபாணி அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக மக்கள் பயனடையும் வகையில் புதுவிதமான அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. திருவாரூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 19% ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் செய்யவும் நெல் வரத்து அதிகம் உள்ள கொள்முதல் நிலையம் அருகில் மற்றொரு கொள்முதல் நிலையம் திறக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

#சற்றுமுன்; துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்...! இது வரை 10 பேர் மரணம்... மீட்பு பணி தீவிரம்...!

Mon Feb 6 , 2023
துருக்கியின் தெற்கு மற்றும் வடக்கு சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய துருக்கியில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 34 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் ஒரு பெரிய நகரம் மற்றும் மாகாண தலைநகரான காசியான்டெப்பில் இருந்து […]

You May Like