தெலுங்கானாவில் மைர்மெகோபோபியா என்ற உளவியல் நிலையால் பாதிக்கப்பட்ட இளம்பெண், எறும்புகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் நகராட்சி பகுதியில் உள்ள சர்வா ஹோம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி மனிஷா(25). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், மனிஷாவுக்கு மிர்மெகோபோபியா என்ற ஒரு தீவிரமான உளவியல் நிலை இருந்தது, இது எறும்புகளைப் பற்றிய தாங்க முடியாத பயத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இது வெறும் ஒரு எளிய பயம் மட்டுமல்ல, அவளுடைய வாழ்க்கையை ஒரு நரகமாக்கிய ஒரு நோயாகும். அவளுடைய குடும்பத்தினர் இந்த உளவியல் பிரச்சினைக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனையை நாடினர், ஆனால் அந்த பயம் அவளை மிகவும் ஆழமாகப் பிடித்திருந்ததால் அதைக் கடக்க இயலவில்லை.
அதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கணவர் ஸ்ரீகாந்த் வழக்கம்போல் வேலையிலிருந்து திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை போன் செய்து தட்டியும் எந்த பதிலும் இல்லாததால், அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது, மனிஷா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெலுங்கானா போலீசார், அறையில் மனிஷாவின் தற்கொலைக் கடிதத்தை கண்டறிந்தனர். அதில், கணவரை ஐயா, என்று குறிப்பிட்டு என்னை மன்னிக்கவும், இந்த எறும்புகளுடன் என்னால் வாழ முடியாது. மகளை கவனித்துக் கொள்ளுங்கள் என்று எழுதியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…! மிஸ் பண்ணிடாதீங்க



