உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கஸ்யா நகரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். கணவன் – மனைவி இருவருமே வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கணவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது மனைவி வேறொருவருடன் படுக்கையறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நபரும் காவல்துறையில் தான் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கணவன், இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், அவர்களை வீட்டிற்கு வைத்து பூட்டி விட்டார். இதையடுத்து, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு கூடினர். இந்த அனைத்து சம்பவங்களும் வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், கணவர் தனது மனைவியின் கள்ளக்காதலனை அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. கணவரால் வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்த கதவை, மனைவி உள்ளிருந்து பூட்டி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பெண் காவலருடன் பேச்சுவார்த்தை நடத்தி கதவை திறந்தனர். பின்னர், விசாரணைக்காக மூவருமே காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விவகாரம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், பெண் காவலரின் கணவர் போலீசில் புகாரளித்துள்ளார். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நான் வேலைக்கு புறப்பட்டதும், தன்னுடைய மனைவி அவருடைய கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார். இந்த வழக்கில் விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் அமித் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
Read More : ரூ.1,000 உரிமைத்தொகை வருமா..? தற்காலிகமாக நிறுத்திய தமிழ்நாடு அரசு..!! குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி..!!