BREAKING| உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி..!! – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..

vijay 2

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது. என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.

நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான்.

இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை. அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்றார்.

Read more: டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிப்பது எப்படி..?

English Summary

Financial assistance of Rs. 20 lakhs each to the families of the 39 deceased..!! – Vijay’s announcement..

Next Post

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்..!! ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிக்க ரெடியா..?

Sun Sep 28 , 2025
தமிழ்நாட்டில் வேளாண் பட்டதாரிகளை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றும் நோக்குடனும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்துச் சேவைகளையும் ஒரே திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகவும், தமிழ்நாடு அரசு “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வெளியேறும் சுமார் 4,000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் 600 பட்டயதாரர்களின் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்தி, விவசாய உற்பத்தியைப் பெருக்குவதே அரசின் முக்கிய இலக்காகும். இதன் கீழ், மாநிலம் முழுவதும் […]
money 2025 2

You May Like