கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த விஜய்யின் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வழக்கில் தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.. மேலும் “ கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.. சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்.. அரசு அமைதியாக இருக்க முடியாது..
யார் மீது தவறு உள்ளதோ அவர் மீது நடவடிக்கை வேண்டும்.. தவெக என்ன மாதிரியான கட்சி..? மக்களை கைவிட்டு தலைவரும் பொறுப்பாளர்களும் பொறுப்பற்ற முறையில் வெளியேறி உள்ளனர்.. தங்கள் தொண்டர்களை விட்டு விட்டார்கள்.. தலைமைத்துவ பண்பே இல்லை.. சம்பவத்திற்கு பொறுப்பேற்காத தவெகவுக்கு கடும் கண்டனம்..” என்று நீதிபதி காட்டமாக பேசினார்..
அதேசமயம், விஜய்யின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை?, ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய் பரப்புரை வாகன டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவரது வாகனமும் எப்போது வேண்டுமானாலும் பறிமுதல் செய்யப்படலாம் என தெரிகிறது.
Read more: செல்வத்தை அள்ளித் தரும் பௌர்ணமி பூஜை..!! காலையில் எழுந்தவுடனே இதை பண்ணுங்க..!!