பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் தொகை முழுவதையும் பயனாளியிடமிருந்து எந்தப் பங்களிப்பும் இன்றி, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கின்றன. குழு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையில் (i) இறப்பு அல்லது நிரந்தர முழு ஊனத்திற்கு எதிராக ரூ.5,00,000 (ii) நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டால் ரூ.2,50,000 மற்றும் (iii) விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள் ரூ.25,000 வழங்கப்படுகிறது.
மானிய தொகை
குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது..
மீன் விற்பனை அங்காடி (அலங்கார மீன் வளர்ப்பு/மீன் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளடங்கியது) ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் அல்லது மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு அலகு (கடல் அல்லது நன்னீர்) ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் அல்லது மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது..
புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில்அமைத்தல், திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ‘ஆதிதிராவிடர் மற்றும் மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. புதிய மீன்வளர்ப்பு குளங்கள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தினில் ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளர்த்திட உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
சிறிய அளவிலான பயோயிளாக் குளங்களில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் மீன் வளர்த்திட ஒரு ஹெக்டேருக்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் அல்லது மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. நன்னீர் மீன்வளர்ப்பிற்கான நடுத்தர அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தினில் ஒரு அலகிற்கான’ செலவினமானரூ.14 லட்சம் செலவினத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது.
Read More: நாளை பள்ளிகள் திறப்பு… அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம்…! தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி…