சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த நிலையில் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. எனினும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..
30க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.. அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது முகப்பு பகுதியில் அமைக்கப்பட்ட சாரம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.



