Flash : கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் குவிப்பு.. தீவிர சோதனை..!

new bomb

நெல்லையில் உள்ள கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. எனினும் சோதனையில் அவை வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது..

இந்த நிலையில் நெல்லையில் உள்ள கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப் நாய் உதவி உடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் இதுகுறித்து காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.. ஒன்றரை மாதத்திற்கு முன்பு கூடங்குளம் அனுமின் நிலையத்திற்கு வாட்ஸ் அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது..

கடந்த சில நாட்களாகவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த மர்ம நபரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.. ஆனால் அந்த மர்ம நபர் போலீசாரிடம் சிக்காமல் ஆட்டம் காட்டி வருகிறார்..

Read More : நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பி விடப்படப்பட்ட விமானம்.. இண்டிகோவுக்கு அடுத்த சிக்கல்..

RUPA

Next Post

Breaking : திருப்பரங்குன்றம் தீப வழக்கு.. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி..!

Thu Dec 4 , 2025
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகில் உள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.. மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும்.. ஆனால் 2-ம் உலகப் போரின் போது பாதுகாப்பு காரணமாக ஆங்கிலேய அரசு அதனை தடை செய்தது.. அதனால் கோவில் முன்புறம் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது.. இதை […]
thiruparangnram case 1

You May Like