Flash : பிரேமலதா விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் குவிப்பு.. பெரும் பரபரப்பு..

prema latha 1

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.


மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

இந்த நிலையில் பிரேமலதா விஜய்காந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப் நாய் உதவி உடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. இந்த சோதனை இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது..

முன்னதாக இன்று நடிகர் சென்னை போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் பல பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட. விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், பிரியா பவானி சங்கர், சாக்‌ஷி அகர்வால் வீட்டிற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.. பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் அவரது மகள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த மிரட்டலும் புரளி என்பது தெரியவந்தது..

Read More : Flash : தமிழ்நாட்டிலும் நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற சம்பவம்.. ரவுடி கருக்கா வினோத் செயலால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு..

RUPA

Next Post

குளிர்காலத்தில் தினமும் காலையில் இதை சாப்பிடுங்கள்.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. மேலும் பல நன்மைகள்!

Thu Nov 13 , 2025
பருவகால பழங்களை சாப்பிடுவது எவ்வளவு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். இவற்றில் சில நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. பருவகால உடல்நலப் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும். நெல்லிக்காய் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இது சுவைக்காக மட்டுமல்ல. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி மிக அதிக அளவில் உள்ளது. அதனால்தான் தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும். உங்கள் உடல் ஆரோக்கியமாகவும் […]
amla

You May Like