Flash : பரபரப்பு.. டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இல்லத்தில் தீ விபத்து.. பெரும் சேதம் தவிர்ப்பு..!

cm vijay delhi visit

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கடந்த மாதம் 27-ம் தேதி டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.. தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சந்திக்காமலேயே தமிழ்நாடு திரும்பினார்..


இந்த நிலையில் 3 நாள் அரசு முறை பயணமாக முதல்வர் விஜய் 2-வது முறையாக நேற்று டெல்லி சென்றார்.. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் தற்போது டெல்லியில் தங்கி உள்ளார்.

நேற்று மாலை முதல்வர் விஜய் டெல்லியில் குடியரசு தலைவர் தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.. மேலும் குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் முதல்வர் விஜய் சந்தித்தார்..

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.. அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் உடனிருந்தனர்.. சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

இந்த நிலையில் முதல்வர் விஜய் தங்கியிருந்த டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது.. தமிழ்நாடு இல்லத்தில் உள்ள உணவகத்தில் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் போது சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.. எனினும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது..

இந்த தீ விபத்து ஏற்பட்ட போது முதல்வர் விஜய் தமிழ்நாடு இல்லத்தில் இல்லை.. அவர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதற்காக ஏற்பட்ட சற்று நேரத்தில் உணவகத்தில் சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது..

முதல்வர் விஜய் நாளை வரை டெல்லியில் இருப்பார் எனவும், 12-ம் தேதி காலை மத்திய அமைச்சர்கள் சிலரையும் விஜய் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. அன்றைய தினம் டெல்லியில் இருந்து அவர் தமிழகம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது..

Read More : 30% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியை நீக்கிய மத்திய அரசு..! உங்கள் எரிபொருள் செலவு குறையுமா..?

RUPA

Next Post

Breaking : இன்ப அதிர்ச்சி..! 2 நாட்களில் ரூ.5,600 குறைந்த தங்கம் விலை..! நகை வாங்க காத்திருந்தவர்கள் ஹேப்பி..!

Thu Jun 11 , 2026
In Chennai today, the price of ornamental gold has dropped by ₹2,400 per sovereign, and it is being sold at ₹1,08,000.
Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

You May Like