Flash : 2 முறை உயர்வு.. மாலையில் மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

Jewels 2

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..

இந்த சூழலில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று உயர்ந்தது.. அதன்படி இன்று காலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.1,16,800-க்கு விற்பனையானது..

இந்த நிலையில் சென்னையில் இன்று மாலையும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று மாலை கிராமுக்கு ரூ.190 அதிகரித்து ரூ.14,790க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்து ரூ.1,18,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : பறவைக் காய்ச்சல் தீவிரம்..!! 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! கால்நடைத்துறை போட்ட புது ரூல்ஸ்..!!

RUPA

Next Post

இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்..!! தமிழ்நாடு அரசின் அசத்தல் திட்டம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

Wed Feb 11 , 2026
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) பயன்பாட்டை அதிகரிக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆரம்ப விலை சற்று அதிகமாக இருப்பதால், சாமானிய மக்களும் இதனை வாங்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு […]
ev offer

You May Like