Flash : இன்று மீண்டும் சரசரவென குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..

jewelry photography 808279 2

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.73,360 விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.


ஜூலை மாதத்தை பொறுத்த வரை தங்கம் விலை உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை சரசரவென குறைந்தது.. இதனால் கடந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3,000 என்ற அளவுக்கு தங்கம் விலை குறைந்தது.. ஆனால் நேற்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது..

இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.. அதன்படி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.9,170க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.73,360 விற்பனை செய்யப்படுகிறது. 

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : இந்தியா மீது 25% வரி!. நகைகள் முதல் மருந்துகள் வரை விலை உயரும்!. அமெரிக்கா சந்திக்கபோகும் தாக்கங்கள் என்னென்ன?

RUPA

Next Post

ChatGPT ஆல் ஆபத்து.. ப்ளீஸ்.. இந்த விஷயத்தை செய்யாதீங்க..!! OpenAI CEO சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை

Thu Jul 31 , 2025
People use ChatGPT as a therapist, life coach and talk all personal stuff.. OpenAI CEO Sam Altman warns
Sam Altman

You May Like