Flash : குட்நியூஸ்..! ஒரே நாளில் ரூ.5,000 சரிவு..! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

gold jewlery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,570க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,16,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்றூம் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ ரூ.5,000 குறைந்து வெள்ளி ரூ. 2.80 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

Read More : இவர்களுக்கு மட்டும் தான் ஆதார் e-KYC கட்டாயம்..! புதிய LPG விதி குறித்து மத்திய அரசு விளக்கம்..!

RUPA

Next Post

Flash : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. இழுபறிக்கு பின் ஒப்பந்தம் கையெழுத்தானது..!

Wed Mar 18 , 2026
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான […]
dmk cpi

You May Like