Flash : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ.4,000 சரிவு.. தங்கம், வெள்ளி விலை குறைவு.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

gold silver rate

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் மீண்டும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் இன்று காலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,00,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.256-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.4000 குறைந்து ரூ.2.56 லட்சத்திற்கு விற்பனையாகிறது..

Read More : தங்கம், சொத்துக்கள் வாங்கப் போறீங்களா..? ஆன்லைனில் எவ்வளவு வரை பணப்பரிமாற்றம் செய்யலாம்..? சிக்கினால் அவ்வளவு தான்..!!

RUPA

Next Post

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கியில் வேலை..!! ஆரம்ப சம்பளமே ரூ.37,000..!! ஃபெடரல் வங்கி அதிரடி அறிவிப்பு..!!

Sat Jan 3 , 2026
கேரள மாநிலம் ஆலுவாவை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா முழுவதும் கிளைகளுடன் இயங்கி வரும் ஃபெடரல் வங்கியில் (Federal Bank), தற்போது அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் இதர சலுகைகளுடன் சேர்த்து மாதம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இது ஒரு நிரந்தரப் பணியிடமாகும். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் […]
Bank Job 2025

You May Like