Flash : குட்நியூஸ்.. ஒரே நாளில் ரூ. 1,200 குறைந்த தங்கம் விலை..!

gold jewelery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.75 லட்சத்திற்கு விற்பனையாகிறது.. இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : PF குறித்த மற்றொரு புதிய தகவல்… சம்பள வரம்பு ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டதா..?

RUPA

Next Post

Summer Tips: மின்விசிறியில் இருந்து சூடான காற்று வருகிறதா..? இதை மட்டும் செய்தால்.. ஏசியை விடக் குளிராக இருக்கும்..!

Fri Apr 17 , 2026
Is hot air coming from the fan? If you do this alone, it will be cooler than the AC!
fan2

You May Like