இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்தது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் நகரும் என்று வலுகுறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இது நகராமல் சென்னை கடற்கரை பகுதியிலேயே 18 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.. இதனால் நேற்று முன் தினம் முதலே சென்னை, திருவள்ளூர், மற்றும் புறநகர் பகுதிகள் கனமழை கொட்டி தீர்த்தது..
இன்று காலை சென்னை அருகே கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.. இது கடற்கரையை நோக்கி நகரும் போது மேலும் வலுவிழக்க வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இது அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது..
இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதே போல் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
நாளை, நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : கனமழை எதிரொலி.. பயிர் சேதத்திற்கு ரூ.20,000 நிவாரணம் அறிவிப்பு.. அமைச்சர் KKSSR தகவல்..!



