பாமக தலைவராக நான் தொடர்வேன் என்றும் மாம்பழம் சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ 2026 ஆகஸ்ட் மாதம் வரை பாமக தலைவர் நான் தலைவர் தான்.. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்.. இன்று வாதங்களை கேட்ட நீதிமன்றம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த அந்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.. சிவில் நீதிமன்றத்தில் நீங்கள் வாதம் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது..டெல்லி உயர்நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் பாமகவின் தலைவர் நான் தான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.. மாம்பழம் சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது..
சென்னை உயர்நீதிமன்றமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே தீர்ப்பை தான் வழங்கினார்கள்.. எனவே இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.. உட்கட்சி பிரச்சனை என்றால் சிவில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.. பாமக தலைவராக நான் தொடர்வேன்.. மாம்பழம் சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது.. பாமகவில் எந்த குழப்பமும் கிடையாது..” என்று தெரிவித்தார்..
ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது..
இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது “பாமக வலுவாக இல்லை.. அதற்கு அன்புமணி தான் காரணம்.. இரட்டை இலக்கத்தில் இருந்த பாமக எம்.எல்.ஏக்கள் தற்போது ஒன்றை இலக்கத்தில் உள்ளது. எனவே அவரை நீக்கிவிட்டோம்.. நீக்கப்பட்ட ஒருவரை எப்படி தலைவராக ஏற்க முடியும்” என்று ராமதாஸ் தரப்பு வாதிட்டது..
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பு, படிவம் A, B-ல் இரு தரப்பு கையெழுத்திட்டால் அதனை ஏற்கமாட்டோம் என்றும், கட்சியின் மாம்பழச் சின்னம் முடக்கப்படும் என்றும் தெரிவித்தது..
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாமக என்பது அங்கீகரிக்கப்படாத கட்சி.. அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்த வரை, தேர்தல் ஆணையம் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது.. உள்கட்சி விவகாரத்தில் கடிதங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.. மேலும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் தீர்வு வேண்டுமானால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று ராமதாஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : மக்களே உஷார்..! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.. வந்தது அலர்ட்..



