ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த எம்.பி தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தர்மர் முறைப்படி அதிமுகவில் இணைந்தார்..
ஓபிஎஸ் ஆதரவால் எம்.பி பதவி பெற்ற தர்மர் அவருடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.. ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவுக்கு சென்ற நிலையில் தர்மர் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர் தர்மர். தனது ஆதரவாளராக இருந்ததால் தரமருக்கு எம்.பி சீட் வாங்கி தந்தார் ஓபிஎஸ்.. ஓபிஎஸ் பிரிவுக்கு இவர் தான் காரணம் என்று அப்போது பேசப்பட்டது..
மனோஜ் பாண்டியன் திமுக பக்கம் சாய்ந்த நிலையில், வைத்திலிங்கமும் சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.. இந்த சூழலில் ஓபிஎஸ்-ஸின் மற்றொரு ஆதரவாளரான தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.. இதனால் ஓபிஎஸ் கூடாரம் மொத்தமாக காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.



