கொடுங்கையூர் பொதுக்கூட்டத்தில் ஆளுநர், நடிகை குஷ்பு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டது.. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. இது தொடர்பான வழக்கு சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது..
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி இந்த வழக்கி சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 1 மாத கால அவகாசம் வழங்கி உள்ளது.
மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கலகத்தை தூண்டுவது என்ற குற்றச்சாட்டை மட்டும் தகுந்த சாட்சிகளோடு நிரூபிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான மற்ற குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் நிரூபித்துள்ளது என்றும் எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Read More : “உயிரே போனாலும் பரவால்ல.. விஜய்யை பார்ப்பது தான் முக்கியம்..” வைரல் வீடியோ.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!



