தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெறவுள்ள நிலையில், நிகழ்விடத்திற்கு வருகை தந்த தலைவர் விஜய்க்கு காவல்துறையின் திடீர் நடவடிக்கையால் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்குக் காரில் வருகை தந்த விஜய், அங்கு கட்சி நிர்வாகிகளால் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் கொடிகளைப் போலீசார் அகற்றிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைப் பார்த்த விஜய் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சி அடைந்தனர்.
காவல்துறை வேண்டுமென்றே கட்சிக்குப் நெருக்கடி கொடுப்பதாக நிர்வாகிகள் குற்றம் சாட்டிய நிலையில், உரிய அனுமதி பெறாமல் பேனர்களும் கொடிகளும் வைக்கப்பட்டதால் அவை அகற்றப்பட்டதாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



