Flash: மாணவர்களே.. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை..!

rain school holiday

கனமழையின் காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 16) முதல் தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையில், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,

கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்பத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இரவு முழுவதும் தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கனமழையின் காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more: என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்..? முன்கூட்டியே எழுதி வைத்த சித்தர்கள்..!! இதை செய்தால் மருத்துவமனைக்கே போக தேவையில்லை..!!

English Summary

Flash: Students.. Schools are closed today in Nellai, tuticorin, and Tenkasi districts..!

Next Post

டிஆர்டிஓ உருவாக்கிய பாராசூட்டில் வீரர்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெற்றிகரமான சோதனை...!

Thu Oct 16 , 2025
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ வீரர்களுக்கான பாராசூட்டில் விமானப்படை வீரர்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தனர். இந்த சோதனை, உள்நாட்டு அமைப்பின் திறன், நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வடிவமைப்பை நிரூபித்துள்ளது. முக்கிய சிறப்பு: தற்போது இந்திய ஆயுதப்படைகள் பயன்படுத்தும் பாராசூட்களில், 25,000 அடிக்கு மேல் செயல்படக்கூடிய ஒரே பாராசூட் இதுவாகும்.உருவாக்கம்: ஆக்ராவில் உள்ள வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் […]
drdo 2025

You May Like