Flash : ஜனநாயகன் சென்சார் வழக்கு.. வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை..! படக்குழுவுக்கு நிவாரணம் கிடைக்குமா?

jananayagan supreme court

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. கடந்த 9-ம் தேதி வெளியாக வேண்டிய இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது.


தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இது குறித்து திரைப்பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பினர்.. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.. இதனால் ஜனவரி 21 வரை ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரி படக்குழுவினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.. அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக திங்கள் கிழமை விசாரிக்க வேண்டும் எனவும் படத்தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே ஜனநாயகன் சான்றிதழ் தொடர்பாக மத்திய சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனநாயகன் பட சென்சார் சான்று தொடர்பான வழக்கு விசாரணை வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறது.. திங்களன்று விசாரணைக்கு வரும் வழக்குகளின் உத்தேச பட்டியலில் ஜனநாயகன் படம் இடம்பெற்றுள்ளது.. எனவே வரும் திங்கள்கிழமை இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது..

பட தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் சென்சார் சான்று வழங்க உத்தரவிடுமா? அல்லது இதுகுறித்து பதிலளிக்க சென்சார் போர்டுக்கு கால அவகாசம் கொடுக்குமா? என்பது வரும் 19-ம் தேதி தெரியவரும்..

Read More : “தமிழ் மக்கள் குரலை மோடியால் ஒருபோதும் அடக்க முடியாது..” விஜய்க்கு ராகுல் காந்தி ஆதரவு..!

RUPA

Next Post

செம ஆஃபர்! விமான டிக்கெட் வெறும் 1 ரூபாய்க்கு! இன்னும் 3 நாட்களே உள்ளன..! இப்போதே புக் பண்ணுங்க!

Tue Jan 13 , 2026
நீங்கள் மிகக் குறைந்த செலவில் விமானத்தில் பயணிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், உங்களுக்காக ஒரு அற்புதமான நற்செய்தி இதோ. நீங்கள் மிக குறைந்த விலையில் விமானத்தில் பயணிக்கலாம். முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, நீங்கள் கற்பனை செய்திராத ஒரு சலுகையை வழங்கியுள்ளது. 2026-ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக, இது ஒரு சிறப்புப் புத்தாண்டு விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனைக்கு ‘செய்ல் இன்டு 2026’ (Sail Into 2026) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த […]
indigo flights 1 1

You May Like