Flash : திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்..! மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்..!

stalin vaithilingam

டெல்டா மாவட்டங்களின் அதிமுக முகமாக அறியப்பட்ட வைத்திலிங்கம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக தன்னை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.. அதற்கேற்றார் போல அவர் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்..


இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் இன்று தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் இன்று திமுகவில் இணைந்தார்…

ஜெயலலிதா அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராக வலம் வந்த வைத்திலிங்கத்தின் வருகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுகவின் கோட்டையை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.. அதேசமயம், அதிமுகவின் உட்கட்சிப் பூசல் மற்றும் ஓபிஎஸ் அணியின் வீழ்ச்சி ஆகியவை திமுகவுக்கு தேர்தல் களத்தில் சாதகமான சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : Breaking : தொடர் உச்சத்தில் தங்கம் விலை..! ஒரே நாளில் ரூ.2,800 உயர்ந்ததால் அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

RUPA

Next Post

Flash : மீண்டும் பாஜக கூட்டணியில் இணையும் அமமுக.. டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Wed Jan 21 , 2026
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. முக்கிய தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி கணக்குகள் மாறத் தொடங்கி உள்ளது.. மறுபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் […]
ttv dinakaran2234 1595052218

You May Like