Flash : நாளை நாகையில் சுற்றுப்பயணம் செய்யும் விஜய்..! காவல்துறையினர் விதித்த 20 நிபந்தனைகள்!

vijay campaign 1

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு பிரதான கட்சி தலைவர்களும் இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் திருச்சியில் கடந்த 13 தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.. இந்த பிரச்சாரம் 15 கட்டங்களாக நடைபெற உள்ளது.. டிசம்பர் 20-ம் தேதி வரை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார்.


அந்த வகையில் விஜய் நாளை நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.. இந்த நிலையில் தவெகவினருக்கு 20 நிபந்தனைகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.. அதன்படி, புத்தூர் பகுதியில் உள்ள அண்ணா, பெரியார் சிலை தடுப்புகள் மீது ஏறக்கூடாது.. அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது.. பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு தாங்களே வாகன பார்க்கிங் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்..

தேசிய நெடுஞ்சாலை, மற்ற சாலைகளின் இரு புறங்களிலும் விளம்பர பதாகைகளை வைக்கக் கூடாது.. கையில் கம்பு, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருக்கக் கூடாது.. பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் தவெகவினரே பொறுப்பேற்க வேண்டும்.. விஜய் பரப்புரை வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ, இரு சக்கர வாகனத்திலோ அல்லது நடந்து செல்லவோ கூடாது.. விஜய் வாகனத்தின் மேல் 5 வாகனங்களுக்கு செல்லக் கூடாது.. என 20 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது..

Read More : Flash : அடுத்த பரபரப்பு.. விஜய் வீட்டில் வெடிகுண்டு? நிபுணர்கள் தீவிர சோதனை..!

RUPA

Next Post

துருக்கியின் ஒட்டோமான் பேரரசை தனி ஆளாக எதிர்த்து நின்ற இந்திய இளவரசி! பேரரசர் அக்பருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

Fri Sep 19 , 2025
சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி அளித்த ஆதரவின் காரணமாக இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், குறிப்பாக ஒட்டோமான் பேரரசின் ஆட்சிக் காலத்தில், மோதல்கள் உட்பட, துருக்கியுடன் பாரதத்திற்கு ஒரு வரலாற்று வரலாறு உண்டு. அத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க துணிச்சலான கதை, முகலாய பேரரசர் பாபரின் மகள் மற்றும் பேரரசர் அக்பரின் அத்தை.. ஒட்டோமான் பேரரசை எதிர்த்த முகலாய இளவரசி குல்பதன் பேகத்தின் […]
indian princess

You May Like