Flash : காஞ்சிபுரத்தில் நாளை விஜய் நிகழ்ச்சி.. 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி.. தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

1280829

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.. கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணங்களை ஒத்திவைத்தார்..


இந்த நிலையில் மாவட்ட வாரியாக உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த தவெக தலைவர் விஜய் திட்டுமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வழக்கு நிலுவையில் உள்ளதால் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. மாவட்ட வாரியாக நலிவடைந்த பிரிவினரை அழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. நாளை முதல் விஜய்யின் மக்கள் சந்திப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது..

அதன்படி நாளை காஞ்சிபுரத்தில் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ளதாக தவெக அறிவித்துள்ளது..

அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் “ மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..

Read More : Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் தாறுமாறு உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

RUPA

Next Post

“உங்க பொண்ணு எவ்வளவு கத்தினாலும் உள்ள வராதீங்க..” பேயோட்டுவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி.. பகீர் சம்பவம்..!

Sat Nov 22 , 2025
உத்தரபிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி உள்ளது. தன்னைத்தானே மந்திரவாதி என்று கூறிக்கொள்ளும் ஹரிபஜன் என்ற நபர், பேயோட்டுவதாக கூறி 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். 8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பல நாட்களாக தொண்டை வலி மற்றும் உணவு உண்ணுவதில் சிரமம் இருந்தது. மருத்துவ சிகிச்சை பலனளிக்காததால், சில கிராமவாசிகள் அச்சிறுமிக்கு பேய் பிடித்ததாகக் கூறினர். அவர்களின் ஆலோசனையின் பேரில், அவரது […]
sexual abuse tantrick 1

You May Like