காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவு காரணமாக எம்.எஸ். ராமய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாசப் பிரச்சினையால் அவதிப்படும் மல்லிகார்ஜுன கார்கே நேற்று வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றார். சில உடல்நலப் பரிசோதனைகளுக்குப் பிறகு, கார்கே நேற்று இரவு முதல் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…
மல்லிகார்ஜுன கார்கே சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. பீகார் தேர்தல் மற்றும் சுற்றுப்பயணத்தில் அதிகரித்த பயணம் காரணமாக அவர் சோர்வாக இருந்ததாகக் கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக சுவாசப் பிரச்சினை எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மல்லிகார்ஜுன கார்கே நேற்று வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமய்யா மருத்துவமனையில் மருத்துவர்களால் கார்கேவுக்கு வழக்கமான பரிசோதனை செய்யப்பட்டது. ஈ.சி.ஜி பரிசோதனையும் செய்யப்பட்டு, நேற்று இரவு முதல் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.