பறந்து வரும் பார்சல்..!! ட்ரோன்கள் மூலம் டோர் டெலிவரி..!! அமேசானின் அசத்தல் ஐடியா..!!

அமேசான் நிறுவனம் தற்போது ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை டெலிவரி செய்யும் பணியை தொடங்கியுள்ளது.


விஞ்ஞானம் வளர வளர மனிதன் முன்னேற்றமும் அடைந்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறான். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து வழங்கி வந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்டமாக ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நிலைக்கு முன்னேறிவிட்டோம். அந்தவகையில், அமேசான் நிறுவனம், 2 அமெரிக்க மாநிலங்களில் ஒருமணி நேரத்திற்குள் ஆர்டர்களை டெலிவரி செய்யும் நோக்கத்துடன், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது.

பறந்து வரும் பார்சல்..!! ட்ரோன்கள் மூலம் டோர் டெலிவரி..!! அமேசானின் அசத்தல் ஐடியா..!!

கலிபோர்னியாவின் லாக்ஃபோர்ட் மற்றும் டெக்சாஸ் கல்லூரி நிலையத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் சமீபத்தில் அமேசானின் ‘பிரைம் ஏர்’ ட்ரோன் சேவை மூலம் பார்சல்களைப் பெற்றுக் கொண்டனர். ”நாங்கள் வரும் காலங்களில் மேலும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு, டெலிவரிகளை வழங்குவதை படிப்படியாக விரிவுபடுத்துவோம்” என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

உறவினர்கள் கண்டித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்! பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

Sat Dec 31 , 2022
தற்போது இளைஞர்களிடம் ஆபாசம் தொடர்பான காணொளியை பார்ப்பது, ஆபாசம், தொடர்பான விஷயங்களில் மூக்கை நுழைப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றனர். தற்போதைய இளைஞர்கள் எல்லோரிடமும் நிச்சயமாக கைபேசி இருக்கும். கைப்பேசி இல்லாத இளைஞர்களே தற்போது இல்லை என்றே சொல்லலாம் இளைஞர்களை விட சிறு குழந்தைகள் கையில் கூட செல்போன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த செல்போனால் ஏற்படும் விபரீதம் இளைய தலைமுறையினரை பல விபரீதங்களில் சிக்க வைத்து விடுகின்றனர். அந்த […]
Baby Dead

You May Like