தமிழகத்தில் அனுமதி அற்ற மனை பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள் இன்று முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2025-2026-ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இன்று முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் முன்பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு வரன்முறை செய்து கொடுக்கப்படும். இதற்கு எந்தக் காலக்கெடுவும் இல்லை. தனி மனையாக வாங்கிய பொதுமக்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். மனைப் பிரிவுகளாக வைத்திருப்பவர்கள் அவற்றை வரன்முறைப்படுத்த 2026 ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் இன்று முதல் தொடங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.thhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக இன்று முதல் 30.11.2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.