மறுகூட்டல் & மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவர்களே..! 23-ம் தேதி வெளியாகும் பட்டியல்…!

Tn School students 2025

பொதுத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ( Notification பகுதியில் ) 23.06.2025 அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்று முடிந்த மார்ச் 2025 , மேல்நிலை இரண்டாம் பொதுத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ( Notification பகுதியில் ) 23.06.2025 ( திங்கட் கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது .

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் , மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: மனிதர்களே கிடையாது.. பஸ் ஸ்டாப் முதல் டீ கடை வரை மனித பொம்மைகள் வாழும் அதிசய கிராமம்..!!

Vignesh

Next Post

பான் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்துவிட்டீர்களா?. வருமான வரி போர்ட்டலில் புதிய வசதி அறிமுகம்!. மத்திய அரசின் லேட்டஸ்ட் அலர்ட்!

Sat Jun 21 , 2025
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), தற்போது வருமானவரி இணையதளத்தில் (Income Tax Portal), ரியல் டைம் PAN மற்றும் வங்கி கணக்கு இணைப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வரி செலுத்துநர்கள் இனி விரைவாக வருமானவரி கணக்கை சரிபார்க்க முடியும். வருமான வரி மின்-தாக்கல் வலைத்தளத்தில், பான் மற்றும் வங்கிக் கணக்கு சரிபார்ப்பு தொடர்பான புதிய வசதியை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய […]
pan card bank account link 11zon

You May Like