Vote: தேர்தல் பணியாற்றும் நபர்களுக்கு 12 A படிவம் வழங்கப்படும்…!

நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் நபர்களுக்கு இத்தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பின் அவர்களுக்கு படிவம் 12A வழங்கப்படும்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களான (Absentees Voters) 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட படிவம் 12D -ன் படி வீட்டிலிருந்தப்படியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபர்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் (Mobile Team) அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர். ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் (Videographer) ஆகியோர் இருப்பர்.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 மற்றும் படிவம் 12A ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதர மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வசதி மையம் (Facilitation Centre) ஏற்படுத்தப்பட உள்ளன. இதர மாவட்டங்களில் பணிபுரிய உள்ள காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில் தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வசதி மையம் (Facilitation Centre) ஏற்படுத்தப்பட உள்ளன.

எண்.06 காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றும் நபர்களுக்கு இத்தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பின் அவர்களுக்கு படிவம் 12A வழங்கப்பட்டு தேர்தல் பணிச்சான்று (Election Duty Certificate) வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணிச்சான்று பெற்ற நபர்கள் அவர்கள் பணிபுரியும் வாக்குச் சாவடியிலே வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

ஸ்டாலினுக்கு தில் இருக்கா?... நானே வருகிறேன்!... இடத்தை சொல்லுங்கள்!... இபிஎஸ் அதிரடி!

Sat Apr 6 , 2024
EPS: முதல்வர் ஸ்டாலினுக்கு தில் இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா?. இடத்தை சொல்லுங்கள். நானே வருகிறேன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் களம் சூடுபிடித்துள்ள நிலையில் நாடு முழுவது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பதில் தமிழக அரசியல் காட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய […]

You May Like