வருகின்ற 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டை வலியுறுத்தி இருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொதுவெளியில் பேசியதால் செங்கோட்டையன் பதவிகள் பறிக்கப்பட்டது.
அதன்பின்னர் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கட்சியில் இணைந்த கையோடு தற்போது முக்கிய நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் வேகத்துடன் செங்கோட்டையன் செயல்பட்டு வருகின்றார். இதன் தொடர்ச்சியாக, அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து பல ‘பெரிய தலைகள்’ வெளியேற வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் இபிஎஸ்யின் தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ராஜ்மோகனை சந்தித்துள்ளார். இது இபிஎஸ் தலைமையிலான அணிக்கு பெரும் அரசியல் பின்னடைவாக அமையக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
Read more: அறிவாலயத்தில் சாதி பாகுபாடா.. திமுக மாஜி MLA கட்சியிலிருந்து நீக்கம்..? முதல்வர் ஸ்டாலின் அதிரடி..



