கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அறிவழகன் காலமானார். அவருக்கு வயது 72.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற இவர், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இருமுறை எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டவர். இன்று காலை தனது வீட்டில் அமர்ந்திருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்ததார். இவரது மறைவு அதிமுக வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் பல முக்கிய தலைவர்கள், அவருக்கு மலர் அஞ்சலியளித்து, குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “மக்கள் பணி என்ற ஒரே நோக்கத்துடன், சுயநலமின்றி அரசியல் வாழ்க்கையை ஆற்றிய அறிவழகனின் சேவை அழியாதது. அவர் இடத்தை நிரப்பமுடியாதது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. அறிவழகனின் மறைவு, கிருஷ்ணராயபுரம் தொகுதி மட்டுமல்லாது, அதிமுக கட்சி முழுவதிலும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.