அதிமுக முன்னாள் MLA துரை அன்பரன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85.
முன்னாள் முதலமைச்சர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரின் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்த துரை அன்பரசன் 1984 முதல் 1987 வரை நெல்லிக்குப்பம் எம் எல் ஏவாக இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர், தென்னாற்காடு மாவட்ட அதிமுக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிப் பொறுப்புகளைப் வகித்ததுடன், கட்சி வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் சேவையாற்றினார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசியல் பணியில் இருந்து விலகி இருந்த இஅவர் இன்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிமுகவினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடல் பெண்ணையாற்று மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
Read more: நேற்று ரூ.600 உயர்ந்த தங்கம் விலை.. இன்று அதிகரித்ததா? குறைந்ததா? விலை நிலவரம்..