அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலைகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு முக்கிய தலைவர்கள் மாறுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம் பி யும் மருத்துவரான மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
யார் இந்த மைத்ரேயன்? 1991-ஆம் ஆண்டு, மைத்ரேயன் பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 1999ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அதிமுகவில் சேர்ந்தார். 2002 ஆம் ஆண்டு, மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்ததற்காக, மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்து வந்தார். 2023 ஆண்டு மீண்டும் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.
Read more: SBI வங்கியில் வேலை.. ரூ. 46 ஆயிரம் சம்பளம்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!