திடீர் சோகம்… முன்னாள் எம்.எல்.ஏ உடல் நலக்குறைவால் காலமானார்…! முக்கிய அரசியல் தலைவர் இரங்கல்…

முன்னாள் எம்எல்ஏ புனலூர் மது உடல்நல குறைபாடு காரணமாக காலமானார்.

கேரளா மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் தலைவருமான புனலூர் மது உடல் குறைபாடு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. இதயம் தொடர்பான நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.


புனலூர் மது முன்பு KSU-யின் மாநிலத் தலைவர், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர், KPCC உறுப்பினர் மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் பதவிகளை வகித்தவர். 1991ல் புனலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது KPCC செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த அவர் உயிரிழந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.

Vignesh

Next Post

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! 16 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை...!

Wed Oct 5 , 2022
தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]
Rains Students Rep PTI 190522 1200x800

You May Like