MDH Masala: இல்லத்தரசிகளே இந்த மசாலாவை படுத்தினால் உயிருக்கே ஆபத்து…!

MDH மற்றும் எவரெஸ்ட் நிறுவனத்தின் நான்கு மசாலாக்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்கொல்லிப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மசாலாக்களை ஆய்வு செய்த ஹாங்காங்கின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. MDH-ன் மெட்ராஸ் கறி மசாலா, சாம்பார் மசாலா, கறி மசாலா, எவரெஸ்ட்டின் மீன் கறி மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மசாலா பொருள்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், கடைகளில் உள்ள மசாலா பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையின் உணவுப் பாதுகாப்பு மையம் கூறியதாவது; பல வகையான ரெடிமேட் செய்யப்பட்ட மசாலா கலவை தயாரிப்புகளின் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி, எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டறியப்பட்டது, ”என்று CFS ஏப்ரல் 5 அன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்தகைய பொருட்களை பொதுமக்கள் சாப்பிடக்கூடாது. வர்த்தகம் பாதிக்கப்பட்ட தயாரிப்புகளில் ஏதேனும் இருந்தால் அவற்றைப் பயன்படுத்துவதை அல்லது விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மாஸ் லுக்கில் அமிதாப் பச்சன்!… கல்கி 2898 AD-ன் புதிய போஸ்டர் வெளியீடு!

Sun Apr 21 , 2024
Amitabh Bachchan: அமிதாப் பச்சன் நடித்த கல்கி 2898 AD திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்திய சினிமாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் வெளியீடான, அறிவியல் புனைகதை காவியமான ‘ கல்கி 2898 AD ‘, நாக் அஸ்வின் இயக்கியது, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இணையத்தில் படத்தைப் பற்றி நிறைய சர்ச்சை […]

You May Like