குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னனி தேர்வு பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு (Mains Examinations) முதன்மைத் தேர்விற்கு வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் பயிற்சி நிறுவனத்தை தேர்வு செய்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் மற்றும் விடுதியில் தங்கி பயிலுவதற்கான விடுதி கட்டணம் தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.