TNPSC GROUP II & IIA முதல்நிலை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

tnpsc exam 2025

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP II & IIA முதல்நிலை தேர்வுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.


இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள TNPSC GROUP II&IIA முதல்நிலை தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய இலவச பயிற்சி வகுப்பு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக 24.07.2025 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் துவங்கப்பட உள்ளது.

நமது தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2024-2025 ஆம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளில் மட்டும் TNPSC GROUP IV தேர்வில் 12 நபர்களும், TNUSRB PC தேர்வில் 13 நபர்களும், TNPSC GROUP IIA தேர்வில் 11 நபர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விவரத்தினை இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் மனுதாரர்கள் 2-Passport size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும். http://tamilnaducareerservice.tn.gov.in என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், வாயிலாகவும், மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இவ்விணையதளத்தில் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம், மாதிரி தேர்வுக்கான பகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும், மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிப்பரப்பப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் TN Career Services Employment youtube channel வாயிலாகவும் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஒளிப்பரப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவின் மிகவும் பயமுறுத்தும் இடம்.. பெயரைக் கேட்டாலே நடுங்கும் மக்கள்.. பல ஆண்டுகளாக தொடரும் மர்மம்.. எங்குள்ளது?

Fri Jul 25 , 2025
இந்தியாவில் திகிலூட்டும், மர்ம இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் பயமுறுத்தும் இடம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.. பல அமானுஷய் அமானுஷ்ய கதைகளால் நிரம்பிய ஒரு பாழடைந்த பங்களா தான் இது. சிலர் இதனை பேய் பங்களா என்றும், பிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இங்கு இருப்பதாகவும் கூறுகின்றனர். சேதமடைந்த சுவர்கள், உடைந்த ஜன்னல்கள் மற்றும் அதிகமாக வளர்ந்த தாவரங்கள் என இந்த பங்களா பார்ப்பதற்கே […]
haunted house story ideas 1

You May Like