பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை எப்பொழுது வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 1983ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 1,44,10,000 வேட்டி மற்றும் 1,46,10,000 சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு தயாராக உள்ளது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு சுமார் 4600 மெட்ரிக் டன் நூல் கொள்முதல் செய்ய அரசு டெண்டர் கொடுத்தது. இந்த நிலையில் பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என கடந்த மாதம் அமைச்சர் காந்தி தெரிவித்து இருந்தார்.
தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இலவச வேட்டி சேலைகளை விநியோகம் செய்யும் பணி எப்பொழுது தொடங்கப்படும் என்று அரசாங்கம் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே இன்று வழங்குவதற்கான வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.



