குட் நியூஸ்…! கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் இலவச லேப்டாப்…!

tn govt 20251 1

அரசு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி (டேப்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக 2025 – 2026 தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம், 20 மாணவர்களுக்கான மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியது.

இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி.செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நடப்பு கல்வி ஆண்டில் ரூ.2,000 கோடியில் 10 லட்சம் மடிக்கணினி வழங்குது குறித்தும் எந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Vignesh

Next Post

காலை உணவை தவிர்ப்பதால் மூளையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது!. புதிய ஆய்வில் தகவல்!

Thu Nov 6 , 2025
பல ஆண்டுகளாக, காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று கூறப்பட்டு வருகிறது, ஆனால் புதிய ஆராய்ச்சி இந்த நம்பிக்கையை தவறாக நிரூபித்துள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, காலை உணவைத் தவிர்ப்பது மூளையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, குறிப்பாக வயதானவர்களுக்கும் இது பொருந்தும். ஆய்வில், 3,400 க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட 63 வெவ்வேறு ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் மற்றும் நினைவக சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். காலை […]
breakfast n

You May Like