தூள்…! தமிழக வழங்கும் சூரிய சக்தி நிறுவல் குறித்து இலவச பயிற்சி… உடனே விண்ணப்பிக்கவும்…!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சூரிய சக்தி நிறுவல் பயிற்சி வரும் 18.06.2025 முதல் 20.06.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.


இப்பயிற்சியில் சூரிய சக்தி துறையில் தொழில்முனைவோரின் அடிப்படைகள், சூரிய சக்தி துறையில் தொழில்முனைவோரின் அடிப்படைகள், சூரிய சக்தி மென்பொருள் கண்ணோட்டம், சூரிய சக்தி அடிப்படைகள் அறிமுகம், அடிப்படை சூரிய சக்தி திட்ட வடிவமைப்பு, நிதி திட்டமிடல், ஒழுங்குமுறைகள் மற்றும் மானியத் திட்டங்கள், சூரிய வணிக மேம்பாடு, AMC & விற்பனைக்குப் பிந்தைய சேவைகள், வணிக விளம்பரப் பயிற்சி, சூரிய PVக்கான வணிக மாதிரிகளைப் புரிந்துகொள்வது, நிதி திட்டமிடல் போன்றவை வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும்.

அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032. 8668102600.

Read More: தூள்…! தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் மட்டும் தான்… பத்திரப் பதிவுத்துறை அதிரடி உத்தரவு…!

Vignesh

Next Post

ரூ.25,000 வரை மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை...! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்...?

Fri Jun 6 , 2025
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின், மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள் ஆகியோரின் குழந்தைகள், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயில உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 2025-26 -ம் நிதி ஆண்டில், 1,000 […]
money e1749025602177

You May Like