சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த திருவள்ளூர் அருகே சரக்கு தடம் புரண்டதால் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை துறைமுகத்தில் இருந்து எரிபொருள் ஏற்றிக் கொண்டு அரக்கோணம் மார்க்கமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத வகையில் தடம் புரண்டதால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கிட்டதட்ட 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை பரவியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த ரயிலில் முழுவதும் எரிபொருள் இருப்பதால் தீயை அணைக்கும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது.
அருகில் சென்று தீயை அணைக்க முடியாத சூழலில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்தபடியே தீயை அணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 8 அதிவிரைவு ரெயில்கள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி.. காலை 5.50 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து மைசூருக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 6.10 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் கோவை விரைவு ரயில் ரத்து. காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காலை 6.25 மணிக்கு சென்னையில் இருந்து திருப்பதிக்கு புறப்படும் சப்தகிரி விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7.25 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் டபுல்டெக்கர் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7.40 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு புறப்படும் பிருந்தாவன் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 9.15 மணிக்கு சென்னையில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள நாகர்சோல் செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரும்புகை வெளியேறுவதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
Read more: சூப்பர் வாய்ப்பு…! தமிழக அரசு வழங்கும் 25% மானியம்…! யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்…!