தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென வெடித்த ஃபிரிட்ஜ்..!! பரபரப்பில் ராணிப்பேட்டை..!! என்ன காரணம்..?

ராணிப்பேட்டை மாவட்டம் மெல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், வழக்கம் போல சாப்பிட்டு விட்டு மனைவி மற்றும் மகன், மகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்க சென்றுள்ளார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மணிகண்டன் மற்றும் அவரது தந்தை, குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் இரவு நேரத்தில் படுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல மாடியில் சென்ற படுத்து தூங்கிவிட்டனர். அப்போது வீட்டில் இருந்து நள்ளிரவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால், அதிர்ந்து போய் விழித்த மணிகண்டன், வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டின் பிரிட்ஜ் வெடித்து சிதறியதோடு வீட்டிற்குள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அவர்கள் வருவதற்குள் வீட்டில் இருந்த பீரோக்கள், துணிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. வீட்டிற்குள் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெயிலின் காரணமாக வீட்டிற்குள் தூங்காமல் வெளியில் சென்று தூங்கியதால் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயர் மின் அழுத்தம் காரணமாக பிரிட்ஜ் வெடித்து சிதறியதா? அல்லது அதீத வெப்பத்திற்கும் இந்த பிரிட்ஜ் வெடித்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவில்லை. வெயில் காலங்களில் மின்சாதன பொருட்களை மிகவும் கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Read More : மக்களே உஷார்..!! சளி, காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் இந்த மருந்துகள் தரமற்றவை..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Chella

Next Post

கட்டுமான நிறுவனங்கள் வீட்டை கட்டி முடிக்க தாமதம் செய்கிறார்களா..? மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

Thu Apr 25 , 2024
கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் சொன்னபடி, புதிய வீட்டை கட்டி முடித்து ஒப்படைக்காமல் கால தாமதம் செய்தால், அவர்கள் மீது வாரண்ட் பிறப்பித்து இழப்பீடு, அபராதத்தை வசூலிப்பதற்கு, புதிய வழிமுறையை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. வீடு கட்ட ஆசைப்படும் பல நடுத்தர வர்க்கத்தினர், ஆசையுடன் கட்டுமான நிறுவனங்களை அணுகுகிறார்கள். ஆனால், சில கட்டுமான நிறுவனங்கள் சொன்னபடி கட்டிடங்களை கட்டியும் தருவது இல்லை. குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வீடுகளை வழங்குவதும் இல்லை. ஆனால், பணத்தை […]

You May Like