சமையலுக்கு மணமூட்டும் ஒரு சாதாரண பொருளாகக் கருதப்படும் கிராம்பு, உண்மையில் நமது ஆரோக்கியத்தின் பல்வேறு கதவுகளை திறக்கும் சாவியாக செயல்படுகிறது. கிராம்பில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கிராம்பு எண்ணெய், ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் மகத்தான மருத்துவ ரகசியங்களை உள்ளடக்கியது.
கிராம்பு எண்ணெய்யின் நன்மைகள் :
* கிராம்பு எண்ணெயில் உள்ள முக்கியக் கூறு யூஜெனோல் (Eugenol) ஆகும். இது நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயல்படும் வலி நிவாரணியாக பயன்படுவதால், பல் வலிக்கு உடனடி தீர்வாக அமைகிறது. இது ஈறுகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதுடன், வாய்த் துர்நாற்றத்தையும் சரிசெய்கிறது.
* இது தவிர, இந்த எண்ணெய் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ரத்தத்தில் உள்ள வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்துகிறது.
* மேலும், கிராம்பு எண்ணெய் ஒரு சிறந்த மன அழுத்தத்தை குறைக்கும் பொருளாக செயல்படுகிறது. மனதிற்குப் புத்துணர்ச்சி அளித்து, தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு நிம்மதியான உறக்கத்தை தூண்டிவிடுகிறது.
* ஆர்த்தரைடிஸ், வாதநோய், தசைவலி மற்றும் சுளுக்கு போன்ற நிலைகளில், வெளிப்புறமாக பயன்படுத்தப்படும்போது இந்த எண்ணெய் வலி நிவாரணியாக செயல்பட்டு, நிவாரணம் அளிக்கிறது.
* அதேபோல், கிராம்பு எண்ணெய் சருமப் பிரச்சனைகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இது முகப்பரு போன்றவற்றை குணமாக்க உதவுகிறது. வயதாவதை தடுக்கிறது, கரும்புள்ளிகளை குறைக்கிறது மற்றும் வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
* மேலும், இது மூச்சு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் சிறந்த நிவாரணியாக உள்ளது. இருமல், சளி, ஆஸ்துமா, சைனஸ், வறண்ட தொண்டை மற்றும் காசநோய் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு இது தீர்வு அளிக்கிறது.
அதேபோல், கிராம்பில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதால், இது கல்லீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற மாற்றத்தைக் குறைக்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் கிராம்பை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. சாதாரண தலைவலிக்கு கிராம்பு எண்ணெய்யை உச்சியில் தடவுவது அல்லது பாலில் கிராம்பு சேர்த்துக் குடிப்பது நல்ல பலன் அளிக்கும்.
Read More : தீபாவளி அதிரடி ஆஃபர்..!! இந்த கடையில் பாதி விலையில் பட்டுப்புடவைகள் வாங்கலாம்..!! எங்கு இருக்கு தெரியுமா..?